தைவான் தேர்தலை அணுக்கமாகக் கண்காணிக்கும் சீனா

தைவான் தேர்தலை அணுக்கமாகக் கண்காணிக்கும் சீனா

1 mins read
5a588714-94f0-4b4c-86ea-cfd20340ed59
தேர்தலில் வாக்களிக்கும் தைவானியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தைப்பே: தைவானின் அதிபர், நாடாளுமன்றத் தேர்தல்கள் ஜனவரி 13ஆம் தேதியன்று தொடங்கியது. இதை சீனா மிகவும் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

தேர்தலுக்கான முடிவு போருக்கான பாதை அல்லது அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.

1996ஆம் ஆண்டில் தைவான் அதன் முதல் அதிபர் தேர்தலை நடத்தியது.

தைவான் தன்னை ஒரு தனிநாடாக நிலைநிறுத்த பாடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.

தைவானுக்குத் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கவும் அதைச் சுதந்திர நாடாக திகழவைக்கவும் ஆளும் கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சி முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை அது அடியோடு மறுக்கிறது.

மூன்றாவது முறையாக ஆட்சிப் பீடத்தில் அமர அது தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதன் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் லாய் சிங் டி போட்டியிடுகிறார்.

திரு லாய் ஓர் அபாயமிக்க பிரிவினைவாதி என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவுடன் அமைதியான நிலையை ஏற்படுத்துவதில் தாம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அதே சமயம், தைவானின் தற்காப்பை வலுப்படுத்த இலக்கு கொண்டிருப்பதாகவும் திரு லாய் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்