தைவான் தனி நாடாவதை அமெரிக்கா ஆதரிக்கவில்லை: பைடன்

தைவான் தனி நாடாவதை அமெரிக்கா ஆதரிக்கவில்லை: பைடன்

1 mins read
5dc5cbd2-cc96-45b2-9952-62c015f5bad0
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தைவான் சுதந்திரம் பெறுவதை அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்று ஜனவரி 13ஆம் தேதி கூறியுள்ளார்.

தைவானிய அதிபர் தேர்தலில் சீனாவை எதிர்க்கும் ஆளும் கட்சிக்கு, மூன்றாவது தவணையாக வாக்காளர்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில் திரு பைடனின் கருத்து வெளியாகியிருக்கிறது.

தைவானியத் தேர்தல், போர் அல்லது அமைதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு என்று சீனா கூறிய நிலையில், ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் லாய் சிங்-தே வெற்றிபெற்றுள்ளார்.

அனைத்துலக அளவில் தைவானின் முக்கிய ஆதரவாளராகக் கருதப்படும் அமெரிக்கா தைவானுடன் அரசதந்திர உறவு இல்லாதபோதும் அதற்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.

தேர்தல், புதிய நிர்வாகம் போன்றவற்றால் பெய்ஜிங்குடனான பிரச்சினை அதிகரிக்கும் என்று வாஷிங்டன் அஞ்சுவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்