கார்கிவ் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சிய ரஷ்யா; 17 பேர் காயம்

கார்கிவ் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சிய ரஷ்யா; 17 பேர் காயம்

படம்: ராய்ட்டர்ஸ்

17 Jan 2024 - 12:29 pm

1 mins read

கியவ்: உக்ரேனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சியதில் 17 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல வீடுகள் சேதமடைந்தன.

இத்தாக்குதல் ஜனவரி 16ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவிப்போரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரஷ்யா தாக்குதல் நடத்திய பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பு ஏதும் இல்லை என்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகவும் கார்கிவ் நகரின் மேயர் இஹோர் தெரெகோவ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்