முன்னாள் எம்.பி.க்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்த நீதிமன்றம்

1 mins read
e9f7fd1e-3dcb-492a-ac35-3ecd644f1c6a
முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வழங்கிய மன்னிப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்த்தரப்பு அரசியல்வாதியை துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றார். அவரது மன்னிப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சட்ட நடைமுறையைப் பின்பற்றி, துமிந்த சில்வா என்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினரை விடுவிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். திரு துமிந்த தமது அரசியல் எதிரியுடன் மேலும் மூவரை சுட்டுக் கொன்றார்.

“2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் துமிந்தவிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்து, அவரை மீண்டும் சிறைக்குள் அடைக்குமாறு சிறைச்சாலைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது,” என்று நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவிததார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் திரு ராஜபக்சே கட்சியின் எதிர்த்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு சில்வா கொலை செய்ததாக தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த மோதலில் பாரத லட்சுமண் பிரேமசந்திரா என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவரது மூன்று ஆதரவாளர்களையும் சில்வாவும் அவருடைய பாதுகாவலர்களும் சுட்டுக் கொன்றனர்.

குறிப்புச் சொற்கள்