தொலைக்காட்சியில் செய்தி வாசித்து இதயங்களைக் கவர்ந்த மலேசிய மாமன்னர், அரசியார்

தொலைக்காட்சியில் செய்தி வாசித்து இதயங்களைக் கவர்ந்த மலேசிய மாமன்னர், அரசியார்

1 mins read
228edf55-1d6e-4506-a90b-482b32fd3bfe
மலேசிய மாமன்னரும் அவரது துணைவியாரும் டிவி3 ஒளிவழியில் செய்தி வாசித்தனர். - படம்: தி ஸ்டார் நாளிதழ்

கோலாலம்பூர்: மலேசிய மாமன்னரும் அரசியாரும் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததைப் பார்த்து மலேசியர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவும் அவரது துணைவியார் அசிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் ஜனவரி 17ஆம் தேதியன்று டிவி3 ஒளிவழியில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குச் செய்தி வாசித்தனர்.

இது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.

இருவரும் செய்தி வாசிக்கும் பகுதி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது.

செய்தி வாசித்த மாமன்னருக்கும் அரசியாருக்கும் மலேசியர்களிடமிருந்து பாராட்டு மழை குவிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்