எக்குவடோரில் சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராகச் செயல்பட்ட வழக்கறிஞர் கொலை

எக்குவடோரில் சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராகச் செயல்பட்ட வழக்கறிஞர் கொலை

1 mins read
619edc6e-cc56-44df-b91e-b24964898c35
நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது திரு சீசர் சுவாரெஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலைப் பார்த்து அவருக்கு நெருக்கமானவர்கள் கதறி அழுதனர். - படம்: இணையம்

குவிட்டோ: எக்குவடோரில் சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த அரசாங்க வழக்கறிஞர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தலைமைச் சட்ட அதிகாரி ஜனவரி 17ஆம் தேதியன்று தெரிவித்தார்.

அண்மையில், எக்குவடோரில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஒளிபரப்பு அறைக்குள் முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு திரு சீசர் சுவாரெஸ் தலைமை தாங்கினார்.

இந்நிலையில், நீதிமன்றத்துக்கு திரு சுவாரெஸ் சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று எக்குவடோர் நீதித்துறை தெரிவித்தது.

இதுகுறித்து அது கடும் கண்டனம் தெரிவித்தது.

சுவாரெசின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்