தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து முன்னிலையில் ஏர்பஸ்

2 mins read
bc884b92-bc5b-49e0-8b44-c96eededf788
பிப்ரவரி 13, 2022 அன்று சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் விமானக் காட்சியின் ஊடக முன்னோட்டத்தின் போது வான்வழி காட்சியில் ஏர்பஸ் ஏ350-1000. - படம்: ராய்ட்டர்ஸ்

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமாக ஏர்பஸ் வந்துள்ளது. இது 2023ல் போயிங்கைவிட அதிக விமானங்களைத் தயாரித்ததாகவும், அதிக தருவிப்பு ஆணைகளைப் (ஆர்டர்)பெற்றதாகவும் அறிவித்தது.

அதே நேரத்தில், போயிங் அதன் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தொடர்பான கிட்டத்தட்ட பேரழிவு ஏற்பட இருந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதன் பொதுமக்கள் தொடர்பையும் மேம்படுத்த முயன்று வருகிறது.

இரு விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான நீண்ட காலப் போட்டியில் ஏர்பஸ் முன்னிலை வகிக்கிறது.

“முன்னர் சமமாக இருந்தது, இப்போது மூன்றில் இரண்டு பங்கு ஏர்பஸ், ஒரு பங்கு போயிங் என்று ஆகியுள்ளது,” என்று வாஷிங்டன் ஏரோடைனமிக் அட்வைசரியின் நிர்வாக இயக்குனர் திரு ரிச்சர்ட் அபுலபியா கூறினார்.

737 மேக்ஸ் 9 சம்பந்தப்பட்ட சம்பவத்தில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு நடுவானில் கழன்று விழுந்தது, போயிங் விமானத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பாதுகாப்பு பிரச்சினைகளின் அண்மைய சம்பவம் அது. 2018, 2019ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இரு பயங்கர விபத்துகள் மிகப்பெரிய ஐரோப்பிய வான்வெளி தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் வளர்ச்சிக்குச் சவாலாக உள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுடன் ஒரு கூட்டமைப்பான ஏர்பசின் பங்குகள், ஜனவரி 12 அன்று சாதனை அளவாக உயர்ந்தன.

2023ல் புதிய விமானங்களுக்கான 2,094 தருவிப்பு ஆணைகளை நிறுவனம் வென்றது, இது ஒரே ஆண்டில் ஆக அதிகமாகும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்