கேமரன் மலையில் நிலச்சரிவு

1 mins read
c98a0c02-b0c4-481b-b785-daa7d3e2a8e0
சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய சாலை மூடப்பட்டுள்ளது. - படம்: கேமரன் மலை பொதுப் பணித்துறை

குவாந்தான்: மலேசியாவில் சுற்றுப்பயணிகளும் உள்ளூர்வாசிகளும் விரும்பிச் செல்லும் பிரபல கேமரன் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜாலான் ஹபு-போ டீ எஸ்டேட் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதிவரை அந்தச் சாலையின் இரு பகுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று பாகாங் மாநில பொதுப் பணித்துறை இயக்குநர் தெரிவித்தார்.

சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய சாலை மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மாற்று சாலை ஏதும் திறக்கப்படவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குறிப்புகளைச் சாலைப் பயனாளர்கள் பின்பற்றுமாறு கேமரன் மலை பொதுப்பணித் துறை கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்