மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மகன் காலமானார்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மகன் காலமானார்

1 mins read
f86650ce-fe31-4eb2-b8a1-bc01f308261f
டெக்ஸ்டர் ஸ்காட் கிங் - படம்: இணையம்

அட்லாண்டா: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் இளைய மகனான டெக்ஸ்டர் ஸ்காட் கிங் காலமானார்.

அவருக்கு 62 வயது.

புற்றுநோய் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தமது பெற்றோரைப் போலவே திரு டெக்ஸ்டர் கிங்கும் சாதாரண மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இருக்கும் கிங் நிலையத்தின் தலைவராக திரு டெக்ஸ்டர் கிங் சேவையாற்றினார்.

கலிஃபோர்னியாவில் உள்ள மலிபு நகரில் இருக்கும் தமது வீட்டில் அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்