அமெரிக்க வர்த்தக அமைப்பில் இணைய தைவான் விருப்பம்

அமெரிக்க வர்த்தக அமைப்பில் இணைய தைவான் விருப்பம்

1 mins read
44cb7bdf-3399-407b-ad8e-3ca365d2f7cf
தைவானின் அதிபராகத் தேர்வுபெற்றுள்ள ஜனநாயக முற்போக்குக் கட்சியின் லாய் சிங் டே. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: அமெரிக்க தலைமையிலான இந்தோ-பசிபிக் பொருளியில் கட்டமைப்பில் தைப்பே இணைய வேண்டும் என்று தைவானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங் டெ புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளியலில் தைவான் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு இதனை அவர் தெரிவித்தார்.

தைவானின் புதிய அதிபராக மே 20ஆம் தேதி பதவியேற்கவுள்ள லாய், தற்போது துணை அதிபராக உள்ளார்.

அக்கட்டமைப்பு 2022ல் நிறுவப்பட்டபோது, கணினி சில்லு தயாரிப்பில் முன்னணி வகிக்கும் தைவானை அதிலிருந்து அமெரிக்கா விலக்கியது.

அந்த வட்டாரத்தில் பெய்ஜிங்கின் அதிகரித்து வரும் பொருளியல், ராணுவ நெருக்குதலை எதிர்கொள்ள பைடன் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

பின்னர் 21ஆம் நூற்றாண்டு அமெரிக்க-தைவான் கூட்டு வர்த்த முயற்சியைத் தொடங்கியது. இருதரப்பு பொருளியல் வளப்பப் பங்காளித்துவ உரையாடல், தொழில்நுட்ப வணிகம், இருநாடுகளுக்கும் இடையேயான முதலீட்டு ஒத்துழைப்பு கட்டமைப்பு ஆகியவற்றை அது இணைத்தது.

குறிப்புச் சொற்கள்