குவீன்ஸ்லாந்தைத்தாக்கும் சூறாவளி

குவீன்ஸ்லாந்தைத்தாக்கும் சூறாவளி

1 mins read
14d9a183-a83e-45c0-9968-902b73f236c4
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி குவீன்ஸ்லாந்தில் உள்ள குக்டவுன் நகரில் முல்லிகன் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பெரும் மழை, வெள்ளத்தால் சேதமடைந்ததை காவல்துறை அதிகாரி ஒருவர் பார்வையிடுகிறார். - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தை ஜனவரி 25ஆம் தேதி பெரும் சூறாவளி தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் நீண்ட வாரயிறுதிக்குப் பிறகு சூறாவளி சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் குடியிருப்பாளர்கள் மூன்று நாள்களுக்குத் தேவையான அவசர பொருள்களை வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குவீன்ஸ்லாந்து கடலோரத்திலிருந்து சுமார் 700 கி.மீட்டர் தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

“ஏற்கெனவே பலத்த காற்று வீசுகிறது. இன்று இரவு குவீன்ஸ்லாந்து கடற்பகுதிகளை சூறாவளித்தாக்கும் என எதிர்பார்ககிறோம்,” என்று ஜனவரி 24ஆம் தேதி வானிலை முன்னறிவிப்பாளர் லாரா போகெல் தெரிவித்தார்.

அழிவை ஏற்படுத்தும் சூறாவளி மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் 900 கிலோ மீட்டர் பரப்பளவில் வீசும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்