தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலிய தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர்

1 mins read
ad9c24b5-3e81-4069-986f-21f9b514a0a4
காஸாவில் வியாழக்கிழமை (ஜனவரி 25) நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், உணவு உதவிக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

காஸா நகரில் வியாழக்கிழமை (ஜனவரி 25) நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், உணவு பெற வரிசையில் நின்றுகொண்டிருந்த 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர் என்று ஹமாஸ் வழிநடத்தும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இது, ஒரு “போர் குற்றம்” என்று அது கூறியது. கூறியது.

இஸ்ரேலியப் படைகள் உதவிக்காகக் காத்திருக்கும் பொதுமக்களைக் குறிவைத்ததாக தேசிய மற்றும் இஸ்லாமியப் படைகளின் நிர்வாக ஆலோசனை சபை கூறியது.

மத்திய காஸாவில், அல்-நுசைராத் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இரவு நேரத்தில் இஸ்ரேல் வான்வழித்  தாக்குதல் நடத்தியது.

அதில், 6 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்கிளேவின் தெற்கு பகுதியில், காசாவின் முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள இரண்டு மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளை இஸ்ரேலிய பீரங்கியால் தாக்கப்பட்டன. 

இதனால், இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்தைத் தேட வேண்டியிருந்தது. 

இதற்கிடையில், வடக்கில், உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் உணவு நிலைமை முற்றிலும் மோசமாக உள்ளது என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பாலஸ்தீனம்இஸ்‌ரேல்