ஜப்பான்: நிலநடுக்க சேதத்தைச் சரிசெய்ய $23.6 பி. செலவாகும்

ஜப்பான்: நிலநடுக்க சேதத்தைச் சரிசெய்ய $23.6 பி. செலவாகும்

1 mins read
f7990073-4d28-43e6-8cdf-7c0496601123
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சேதங்களின் மதிப்பு 17.6 பில்லியன் அமெரிக்க டாலரை (23.5 பில்லியன் வெள்ளி) எட்டக்கூடும். - படம்: ஏஎஃப்பி 

தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பல சேதங்களை விளைவித்தது.

இச்சேதங்களின் மதிப்பு 17.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை (S$23.6 பில்லியன்) எட்டக்கூடும் என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்க மதிப்பீட்டின்படி, இஷிகாவிலும் இரண்டு அண்டை பகுதிகளிலும் ஏற்பட்ட சேதம், 1.1 டிரில்லியன் யென்னுக்கும் (S$9.98 பில்லியன்) 2.6 டிரில்லியன் யென்னுக்கும் இடையிலான மதிப்பில் சேதத்தை விளைவித்தது.

கடந்த கால பெரிய நிலநடுக்கங்களின் தரவுகளைப் பயன்படுத்தி இந்தப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டன என்று அமைச்சரவை அலுவலக அதிகாரி ஒருவர் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்றஅரசாங்க பொருளாதாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

பனியாலும் சேதமடைந்த சாலைகளாலும் இஷிகாவாவில் சீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும்போது சிக்கல்கள் ஏற்பட்டன.

அதனால்,அதிகாரிகள் ஜனவரி 25 அன்று அங்கு நடக்கவிருந்த விரிவான மறுசீரமைப்பு திட்டங்களைப் பற்றி தெரிவித்தனர்.

தொழிற்சாலைகளையும் துறைமுகங்களையும் மறுபடியும் கட்டுவது , வெளியேற்றப்பட்டவர்களுக்கான தங்குமிடங்களை மேம்படுத்துவது, சுற்றுலாப் பயணிகளை அப்பகுதிகளுக்கு ஈர்ப்பது ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்