நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றம்: ஐநா கண்டனம்

1 mins read
c023e489-4920-4966-bfce-79b6be6ac22f
படம். - தமிழ் முரசு

ஜெனிவா: அமெரிக்க மாநிலமான அலபாமாவில் நைட்ரஜன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கண்டித்துள்ளார்.

இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடுமைப் படுத்துவதற்கு சமம் என்று அவர் கூறியுள்ளார்.

கெனத் ஸ்மித் என்பவர் 1988ஆம் ஆண்டு கூலிப் பணத்துக்காக கொலை செய்தார். நைட்ரஜன் வாயுவைக் கொண்டு வியாழக்கிழமை அன்று அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது பற்றிக் கருத்துரைத்த ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க், “நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து கடும் கவலை தெரிவிக்கப்படும் வேளையில், கெனத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு அந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது.

“இந்த முறை இதற்கு முன் சோதித்துப் பார்க்காத ஒன்று. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது கொடுமைப்படுத்துவதற்கு ஈடாகலாம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்