தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணத்தைத் தொடங்கியது உலகின் ஆகப் பெரிய சொகுசுக் கப்பல்

1 mins read
c89ce6ef-1a47-42df-b933-cb17f4879178
‘ஐகான் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பல், திரவநிலை இயற்கை வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. - படம்: என்டிடிவி

நியூயார்க்: 20 அடுக்குகள்! கிட்டத்தட்ட 8,000 பயணிகளுடன் 2,350 பணியாளர்களை ஏற்றிச் செல்லும் திறன். எண்ணற்ற ஆடம்பர அம்சங்கள்.

ராயல் கரீபியன் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஐகான் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பலின் சிறப்பம்சங்களில் இவையும் அடங்கும்.

உலகின் ஆகப் பெரிய பயணிகள் சொகுசுக் கப்பல் என்ற சிறப்பு இதனைச் சாரும்.

இந்த சொகுசுக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை அமெரிக்காவின் மயாமி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை (ஜனவரி 27) தொடங்கியிருக்கிறது.

திரவநிலையில் உள்ள இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் ‘ஐகான் ஆஃப் த சீஸ்’ குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

இத்தகைய கப்பல்களால் காற்றில் மீத்தேன் வாயு கலக்கும் என்பது அவர்களின் கவலை.

வெப்பமயமாதல் விளைவுகளை எடுத்துக்கொண்டால் மீத்தேன், கரியமில வாயுவைக் காட்டிலும் மோசமானது எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்