தந்தையின் தலையைத் துண்டித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

தந்தையின் தலையைத் துண்டித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

1 mins read
6eb9ed82-f5b6-43cd-86de-900c6bb8d7a7
மத்திய பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்ட 33 வயது ஜஸ்டின் மோன். - படம்: யூடியூப்

நியூயார்க்: தந்தையின் தலையைத் துண்டித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட தலையுடன் காணொளி ஒன்றில் ஜஸ்டின் மோன் தோன்றி அது தம்முடைய தந்தையுடையது என்று தெரிவித்தார்.

அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையில் இறங்க வேண்டும் என்று அவர் அந்தக் காணொளியில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் எஃப்பிஐ தலைவர் கிறிஸ்டஃபர் வுரே, அமெரிக்க தலைமைச் சட்ட அதிகாரி மெர்ரிக் கார்லண்ட் ஆகியோரைப் பிடித்தால் வெகுமதி வழங்கப்படும் என்றும் ஜஸ்டின் கூறியதைக் காணொளி காட்டியது.

இந்நிலையில், ஜனவரி 30ஆம் தேதியன்று 33 வயது ஜஸ்டின் மத்திய பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்டார்.

ஜஸ்டினின் வீட்டில் தலையில்லாச் சடலம் ஒன்றைக் காவல்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்