தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்த வடகொரியா

1 mins read
e778b1eb-7740-4acc-ac3f-6680c4bfd789
வடகொரியா, நிலத்திலிருந்து விண்ணிற்கு பாய்ச்சக்கூடிய புதிய ஏவுகணையை பிப்ரவரி 2ஆம் தேதி சோதித்ததாக கேசிஎன்ஏ தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியா, பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்ததாக அதன் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

தற்காப்புத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்காக அந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வார காலத்தில் பியோங்யாங் அத்தகைய ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பது இது நான்காவது முறை.

புதிய ஆயுதக் கட்டமைப்பின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கிலான வழக்கமான நடவடிக்கை அது என்றும், வட்டாரத்தில் தற்போது நிலவும் சூழலுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் குறித்து ஒரு நாள் கழித்தே கேசிஎன்ஏ செய்தி வெளியிடுவது வழக்கம் என்பதை ராய்ட்டர்ஸ் சுட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்