சிட்னி: காலைக் கதிரவன் பாய்ச்சிய ஒளியில் மலை உச்சியிலிருந்து வெண்ணிற மேகங்கள் வீழும் காட்சி.
மேற்கு ஆஸ்திரேலியாவின் ‘ஸ்டெர்லிங் ரேஞ்’ பகுதியில் ஆக உயரமான மலையான ‘பளஃப் நோல்’ உச்சியை அடைந்த இரு மலையேறிகள் கண்ட காட்சி இது.
உயரமான நிலப்பரப்புகளும் வழக்கத்துக்கு மாறான வானிலை நிலவரமும் கூடி வரும்போது இத்தகைய ‘மேக நீர்வீழ்ச்சி’ உருவாகி, கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
அண்மைய வாரங்களில் இத்தகைய அதிசயக் காட்சியை மலையேறிகளும் புகைப்படக் கலைஞர்களும் அதிர்ஷ்டவசமாகக் கண்டு பூரித்துப் போயினர்.
அதிகப்படியான வெப்பமும், மிகுந்த குளிரும் இல்லாத ஒரு நிலையில் இதுபோன்ற ‘மேக நீர்வீழ்ச்சி’ தோன்றலாம் என்று கூறப்படுகிறது.
பனிமூட்டம் போல் இருந்தாலும் அதில் உள்ள அடர்த்தியால், நகரும் பனிமூட்டமாக நீர்வீழ்ச்சி போல் காட்சியளிக்கிறது.

