சக்தி வாய்ந்த ஜிலோங்-3 ஏவுகணையை பாய்ச்சிய சீனா

சக்தி வாய்ந்த ஜிலோங்-3 ஏவுகணையை பாய்ச்சிய சீனா

1 mins read
89fae7d8-9a71-4e1e-a8df-e68e48258cfd
சீனா வர்த்தக ரீதியிலான ஏவுகணைகளை இவ்வாண்டு அதிகம் பாய்ச்சலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சிறிய ஆனால் சக்தி வாய்ந்ததும் குறைந்த செலவிலும் ஆன, வெடி பொருளை தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணை ஒன்றை சீனா வான்வெளியில் பாய்ச்சியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஒன்பது துணைக்கோள்களை சனிக்கிழமை (ஜனவரி 3) அன்று பாய்ச்சியதாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வர்த்தக ரீதியிலான ஏவுகணைகளை இவ்வாண்டு சீனா அதிகம் பாய்ச்சலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜிலோங்-3’ அல்லது ‘ஸ்மார்ட் டிரேகன்-3’ என்று அழைக்கப்படும் அந்த ஏவுகணை, தென்சீன மாநிலமான குவான்டோங்கின் யாங்ஜியாங் நகரக் கடற் பகுதியில் அமைந்துள்ள மிதவையிலிருந்து பாய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது.

சீன ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான ‘சைனா ராக்கெட் கம்பனி’ 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக இதுபோன்ற ஏவுகணையை பாய்ச்சி உள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்துப் பேசிய சீன அதிபர் ஸி ஜின்பிங், தொடர்புகளுக்காக, தொலைவில் இருந்து கிடைக்கும் கதிர் உணர்வுகளுக்காக, விண்வெளிப் பயணத்துக்காக முக்கிய தொழில் துறைகளை விரிவுபடுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும், சீனாவின் வாகன தயாரிப்பு நிறுவனமான கீலி ஹோல்டிங் குருப் தனது ஆளில்லா வாகனங்கள் துல்லியமாக பயணங்கள் மேற்கொள்ள வகை செய்ய 11 துணைக் கோள்களை சனிக்கிழமை (பிப்ரவரி 3) அன்று பாய்ச்சியுள்ளது.

குறிப்புச் சொற்கள்