வின்டோயிக்: நமிபியாவின் அதிபர் ஹாகே கொட்ஃபிரைட் கெயிங்கோப் காலமானார். அவருக்கு 82 வயது.
அவருக்குப் புற்றுநோய் இருந்தது அண்மையில் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நமிபியா தலைநகர் வின்டோயிக்கில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி 4ஆம் தேதி காலை திரு கெயிங்கோப்பின் உயிர் பிரிந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்கா செல்ல இருப்பதாக திரு கெயிங்கோப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

