2026ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டி நியூஜெர்சியில்

2026ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டி நியூஜெர்சியில்

1 mins read
855f1a7f-ae88-4a69-a1e1-291c7c488734
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெறவிருக்கும் மெட்லைஃப் விளையாட்டரங்கம். - படம்: புளூம்பெர்க்

மயாமி: 2026ஆம் ஆண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டி அவ்வாண்டு ஜூலை 19ஆம் தேதி, அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் விளையாட்டரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ஆண்டு ஜூன் 11ஆம் தேதி, மெக்சிகோ சிட்டியில் உள்ள அஸ்டெக்கா விளையாட்டரங்கில் தொடக்க ஆட்டம் நடைபெறும்.

‘ஃபிஃபா’ எனப்படும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம், பிப்ரவரி 4ஆம் தேதி இந்தத் தகவல்களை வெளியிட்டது.

2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக ஏற்றுநடத்தவிருக்கின்றன.

இந்த மூன்று நாடுகளில் உள்ள 16 விளையாட்டரங்கங்களில் 104 ஆட்டங்கள் நடைபெறும்.

அட்லாண்டாவிலும் டல்லாசிலும் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.

மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் மயாமியில் நடைபெறும் என்றும் காலிறுதிப் போட்டிகள் லாஸ் ஏஞ்சலிஸ், கன்சாஸ் சிட்டி, மயாமி, போஸ்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

இதற்கு முன்னர் 1994ஆம் ஆண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2026ன் உலகக் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி நடைபெறவிருக்கும் மெட்லைஃப் விளையாட்டரங்கில் 82-500 பேர் அமர்ந்து விளையாட்டைக் காணலாம்.

குறிப்புச் சொற்கள்