பிளிங்கனின் சவூதி பயணம்; நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்

1 mins read
aa905a24-4ac5-4742-b767-a21ee77c083b
காஸா முனையில் வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொள்ளும் பாலஸ்தீனர்கள். - படம்: புளூம்பர்க்

தோஹா: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சவூதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிப்ரவரி 5ஆம் தேதியன்று சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது சல்மானை அவர் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது.

ரஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமைச்சர் பிளிங்கனின் சவூதி பயணம் போர் நிறுத்தத்தைப் பெற்றுத் தரும் என்று பாலஸ்தீனர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி அமைச்சர் பிளிங்கனும் சவூதி பட்டத்து இளவரசரும் கலந்துரையாடியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பிறகு ஹோட்டலுக்குத் திரும்பிய அமைச்சர் பிளிங்கன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

போர் நிறுத்தத்துக்கு இணங்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகள் கடந்த வாரம் அழைப்பு விடுத்தனர்.

இதுதொடர்பாக, ஹமாஸ் அமைப்பின் பதிலுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

போர் நிச்சயமாக நிறுத்தப்படும் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்