முழு அரச மன்னிப்புக்கு விண்ணப்பம் செய்வது குறித்து நஜிப் பரிசீலனை

முழு அரச மன்னிப்புக்கு விண்ணப்பம் செய்வது குறித்து நஜிப் பரிசீலனை

1 mins read
dba3d6f2-2e7a-4db5-8ae3-d5ffd1cb76a0
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனைக் காலத்தை அரச மன்னிப்பு வாரியம் அண்மையில் பாதியாகக் குறைத்தது.

அதன்படி நஜிப்பின் தண்டனைக் காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், முழு அரச மன்னிப்பு கேட்டு விண்ணப்பம் செய்வது குறித்து நஜிப் பரிசீலனை செய்வதாக அவரது வழக்கறிஞர் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தெரிவித்தார்.

முழு அரச மன்னிப்பு கிடைத்தால், நஜிப் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுவார்.

குறிப்புச் சொற்கள்