சீனப் புத்தாண்டையொட்டி நெடுஞ்சாலை சுங்க கட்டணம் தள்ளுபடி

1 mins read
57fb59f0-db3f-42b8-a51a-5e90730b9700
இரண்டு நாள்கள் சுங்க கட்டணமில்லா பயணத்திற்கு 42.99 மில்லியன் ரிங்கிட் (S$12.2 மில்லியன்) இழப்பு அரசுக்கு ஏற்படும் என மலேசிய அரசு தெரிவித்தது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: சீனப் புத்தாண்டு வருவதையொட்டி வரும் பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் தனியார் வாகனங்களில் மலேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்பவர்கள் சாலைகளில் சுங்க கட்டணமில்லா பயணத்தை அனுபவிப்பார்கள் என அந்நாட்டு பொதுபணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

(கிளாஸ் 1 ரக) தனியார் வாகனத்திற்கான இந்த சுங்க கட்டணமில்லா பயணம் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக திரு நந்தா லிங்கி மேலும் கூறினார்.

ஜோகூரில் உள்ள பங்குனன் சுல்தான் இஸ்கந்தர் (பிஎஸ்ஐ) மற்றும் தஞ்சங் குபாங் சாலை சுங்க நிலையங்கள் தவிர மற்ற அனைத்து சுங்க நிலையங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்