‘தயீப் வீடு திரும்பிவிட்டார்’

‘தயீப் வீடு திரும்பிவிட்டார்’

1 mins read
559878a8-5500-4811-84ab-5c731a10557a
சரவாக்கின் முன்னாள் ஆளுநர் அப்துல் தயீப் மஹ்முத். - படம்: தி ஸ்டார் நாளிதழ்

கூச்சிங்: சரவாக்கின் முன்னாள் ஆளுநர் அப்துல் தயீப் மஹ்முத்தைக் காணவில்லை என்று பிப்ரவி 6ஆம் தேதியன்று செய்தி வெளியானது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு தயீப்பை அவரது மனைவி திருவாட்டி ரகத் குர்தி தயீப் கடத்திச் சென்றதாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், திரு தயீப் வீடு திரும்பிவிட்டதாக சரவாக் காவல்துறை ஆணையர் மஞ்சா அட்டா பிப்ரவரி 7ஆம் தேதியன்று தெரிவித்தார்.

திரு தயீப் கடத்தப்பட்டதாகக் கூறி மொத்தம் எட்டு புகார்கள் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

இந்நிலையில், திரு தயீப் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி வேடிக்கைக்குரியது என்று மலேசியக் காவல்துறை தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிகழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்றார் அவர்.

திரு தயீப், 1981ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை சரவாக்கின் முதல்வராகப் பதவி வகித்தவர்.

குறிப்புச் சொற்கள்