ஆழமான பனிப்படர்ந்த கடலில் சிக்கிகொண்ட திமிங்கலங்கள்

ஆழமான பனிப்படர்ந்த கடலில் சிக்கிகொண்ட திமிங்கலங்கள்

1 mins read
ae5efdef-d2b1-419b-965f-98891d369f28
ரௌசு நகருக்கு வெளியே பனிக்கட்டிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட ஓர்காஸ் பற்றி பிப்ரவரி 6ஆம் தேதி தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படை அதிகாரிகள் கூறினர். - படம்: வைல்டுலைஃப் ப்ரோ எல்எல்சி/ஃபேஸ்புக்

தோக்கியோ: வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் ஆழமான பனி படர்ந்த கடலில் குறைந்தது 10 ராட்ஷச திமிங்கலங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்காஸ் என்றும் அழைக்கப்படும் அந்த ராட்ஷச திமிங்கலங்கள் பனிபடர்ந்த கடலில் மேற்பரப்பில் இருக்கும் சிறிய இடைவெளியில் தங்கள் தலையை வெளியே நீட்டிகொண்டு உயிருக்கு போராடுவதை அந்நாட்டு அரசாங்க ஒளிபரப்பான ‘என்எச்கே’ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட படங்களில் காண முடிந்தது.

கிட்டத்தட்ட 13 ராட்ஷச திமிங்கலங்கள் பனிக்கட்டியின் துளையிலிருந்து தலையை வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை தான் கண்டதாக ‘வைல்டுலைஃப் ப்ரோ எல்எல்சி’ யின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியைப் படம்பிடித்தவர் தெரிவித்ததாக ‘என்எச்கே’ கூறியது.

குறிப்புச் சொற்கள்