தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; குறைந்தது 24 பேர் மாண்டனர்

1 mins read
7adb7fa1-bac9-49a2-a814-9b10a1b63ab1
பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்கு மாநிலமான பலுச்சிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களின் அலுவலகம் அருகே இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.

பிப்ரவரி 7ல் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் மாண்டனர்.

குண்டு வெடிப்பு காரணமாகப் பலர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அண்மைய மாதங்களில் பாகிஸ்தானில் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

பிப்ரவரி 7ஆம் தேதியன்று பிஷின் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் மாண்டனர்.

இரண்டாவது குண்டு வெடிப்பு கில்லா சைஃபுல்லா நகரத்தில் நிகழ்ந்தது.

இந்த நகரம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்