தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறு வடிவாகவும் அசத்தும் பத்துமலை

1 mins read
5d32280f-00c8-4569-bbae-3eda0e8f12d8
பத்துமலையின் லேகோ வடிவத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். - படம்: இணையம்

உலகத் தமிழர்கள் வழிபாட்டுக்காக விரும்பி நாடும் ஓர் இடம், மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள பத்துமலை ஆகும்.

குறிப்பாக, இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா அங்கு கோலாகலமாக நடந்தேறியது.

இந்த பத்துமலையைச் சிறப்பிக்கும் வகையில் ‘லேகோலேண்ட்’, அதன் ‘மினிலேண்ட் அமேஸிங் மலேசியா’ பகுதியில் அமைத்துள்ள மாதிரி வடிவமைப்பு ஒன்று, இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இடத்தை மட்டும் வடிவமைக்காமல் அங்கு மக்கள் இருப்பதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு லேகோ நினைவுச்சின்னத்தையும் திட்டமிட்டுக் கட்டும் பணிகள் மலேசியாவிலேயே நடந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்