ஹெய்ட்டியில் காவல்துறையுடனான மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர்

ஹெய்ட்டியில் காவல்துறையுடனான மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர்

1 mins read
47d41d8a-d2b3-4a2f-8d76-7f739518feec
ஹெய்ட்டியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. - படம்: இபிஏ

போர்ட் ஆஃப் பிரின்ஸ்: ஹெய்ட்டியில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் ஏரியல் ஹென்ரியின் ஆட்சியின்கீழ் சட்டவிரோத கும்பல்களின் கோரத் தாண்டவம் தலைவிரித்தாடுவதாக ஹெய்ட்டி மக்கள் குறைகூறுகின்றனர்.

இதன் காரணமாக, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பலர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், சுற்றுப்புற முகவையைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலைச் சேர்ந்த சிலருக்கும் ஹெய்ட்டி காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.

இதில் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஐவர் காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 7ஆம் தேதியன்று பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக திரு ஹென்ரி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், நாட்டு மக்களிடம் அவர் இன்று உரையாற்ற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் ஜொவேனல் மோய்சி படுகொலை செய்யப்பட்ட பிறகு திரு ஹென்ரி பிரதமர் பதவி ஏற்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்