தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரச கடமைகளுக்குத் திரும்பிய இளவரசர் வில்லியம்

1 mins read
5d2e3545-378a-4ba5-8c94-1c09a311a597
வின்சர் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிமக்களைக் கௌரவிக்கும் இளவரசர் வில்லியம். - படங்கள்: இன்ஸ்டகிராம் / பிரின்ஸ் அண்ட் பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ்

லண்டன்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மீண்டும் அரச கடமையாற்றத் தொடங்கியுள்ளார்.

பிரிட்டிஷ் மன்னரும் அவருடைய தந்தையுமான சார்லஸ் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்றுவருவதாலும் அவருடைய மனைவி அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதாலும் சிறிதுகாலம் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை வில்லியம் தவிர்த்திருந்தார்.

இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 7ஆம் தேதி வின்சர் கோட்டையில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் இளவரசர் வில்லியம் கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில், சமூகப் பணி மற்றும் பிற நற்செயல்கள் புரிந்த அந்நாட்டுக் குடிமக்களைக் கௌரவித்து, அவர்களை அங்கீகரிக்கும் விதமாக பதக்கங்களை இளவரசர் வழங்கினார்.

லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் அறக்கட்டளைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்