வாஷிங்டன்: “எனது புத்திக்கூர்மையைக் குறித்து கேள்வி எழுப்புவதா” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொதிப்படைந்துள்ளார்.
“எனக்கு நினைவுகள் நன்றாக இருக்கிறது,” என்று கூறியுள்ள அவர் நீதித் துறையின் அறிக்கையை சாடியிருக்கிறார்.
திரு பைடன் வகைப்படுத்தப்பட்ட தகவல்களை கையாண்டது குறித்து அமெரிக்க நீதித் துறையின் விசாரணை அதிகாரி குறை கூறியுள்ளார். குறிப்பாக அவரது புத்திக்கூர்மை மற்றும் வயது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் இருக்கிறது.
இம்மாதம் 8ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் 81 வயது பைடன் எடுத்தெறிந்து பேசினார். ஆவேசமடைந்தார்.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் அவர் பணியைத் தொடருவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
“நான் வயதானவன், எனக்கு என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அதிபராக இருக்கிறேன். நான் இந்த நாட்டை சரியானப் பாதையில் வைத்துள்ளேன். எனக்கு அவரது அறிவுரை தேவையில்லை,” என்று திரு பைடன் கூறினார்.
அதோடு, நல்ல மனநலத்தில் தான் இருப்பதாகவும் அவர் தற்காத்துப் பேசியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரு பைடன், எகிப்திய அதிபர் அப்துல் ஃபட்டா இல்-சியியை தவறுதலாக மெக்சிகோ தலைவர் என குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் கூட்டத்தை ஏறக்குறைய முடித்துக்கொண்டு வெளியேறிபோது அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
சிறப்பு வழக்கறிஞரின் அறிக்கையில் திரு பைடன், நினைவாற்றல் குறைந்த வயதானவர் என்று வருணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் அடிப்படை உண்மைகளை நினைவுகூர்வதற்குப் போராடுவதால் கடுமையான அதிபருக்கான தேர்தலில் அவரது வயது குறித்த கவலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

