நியூயார்க்கில் 50 ஆண்டுகளில் இல்லாத வீடமைப்பு நெருக்கடி

1 mins read
13486d93-92ed-4126-ad30-83abbae85005
நியூயார்க் நகரம். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சென்ற ஆண்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வீட்டுப் பற்றாக்குறை காணப்படுகிறது.

அந்நகரில் சென்ற ஆண்டு வாடகைக்கு எடுக்கக் காலியாக இருந்த வீடுகளின் விகிதம் 1.4 விழுக்காடாக சரிந்தது. வியாழக்கிழமை (8 பிப்ரவரி) வெளியான புள்ளி விவரங்களில் இத்தகவல் தெரிய வந்தது.

1968ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த விகிதம் இவ்வளவு குறைவாகப் பதிவானதில்லை. நகரில் வாழ விருப்பப்படுவோரிடையே வீடுகளுக்கான தேவைக்கு ஏற்ற வேகத்தில் கட்டுமானப் பணிகள் இடம்பெறவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

பொதுவாக காலியாக இருக்கும் வீடுகளின் விகிதம் ஐந்திலிருந்து எட்டு விழுக்காடு வரை இருப்பது நல்லது என்று வீடமைப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர். காலியான வீடுகளின் விகிதம் அதிகமாக இருக்கும்போது தேவைப்படுவோருக்கு உகந்த நேரத்தில் அடுக்குமாடி வீடுகள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேவேளை அப்படிப்பட்ட சூழலில் வீட்டு உரிமையாளர்களுக்கிடையே வாடகைதாரர்களைப் பிடிப்பதற்கான போட்டியும் நிலவும். அவ்வாறு நேர்ந்தால் வாடகை விலை உயர்வு சீராக இருக்கும்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க்கின் வீடமைப்பு நெருக்கடி தொடர்ந்து மோசமடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்