தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக அதிக தொகுதிகளை இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றினர்

1 mins read
870bef70-e37c-4576-9cd2-3858408ee288
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது. வன்முறை, பொருளியல் மற்றும் அரசியல் நெருக்கடிளுக்கு இடையே இத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், மற்ற கட்சிகளைவிட இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஆக அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட அவரது கட்சிக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அவரது கட்சியினர் பலர் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.

இந்நிலையில், அவர்கள் இதுவரை 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறியது.

நவாஸ் ஷரிஃபின் கட்சிதான் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அக்கட்சி இதுவரை 69 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்னும் 22 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரவில்லை என்றும் அவற்றை நவாஸ் ஷரிஃபின் கட்சி கைப்பற்றினாலும் வெற்றி பெற அவை போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற 169 தொகுதிகள் தேவை.

எனவே, எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்