உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏழு பேர் மரணம்

உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏழு பேர் மரணம்

1 mins read
490ab6be-c85d-4b6e-8a17-ebcba58701f8
ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக கார்கிவ் நகரில் உள்ள வீடு கொழுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்க உக்ரேனிய தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

கீவ்: உக்ரேனின் கார்கிவ் நகரைக் குறிவைத்து ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஏழு பேர் மாண்டனர்.

அவர்களில் மூவர் சிறுவர்கள்.

இந்தத் தாக்குதல் உக்ரேன் நேரப்படி பிப்ரவரி 9ஆம் தேதி இரவு நிகழ்ந்ததாக கார்கிவ் ஆளுநர் ஒலே ஸ்னேஹுபோவ் தெரிவித்தார்.

தாக்குதல் காரணமாக ஏழு மற்றும் நான்கு வயது சிறுவர்களுடன் ஆறு மாதக் குழந்தை ஒன்றும் மாண்டதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்