தாய் தவறுதலாக ‘அவன்’ அடுப்பில் வைத்த குழந்தை மரணம்

1 mins read
45929735-e6b9-4ca2-9f37-da9d2e1f68d7
படம்: - தமிழ் முரசு

கான்சஸ் சிட்டி: அமெரிக்காவில் ஒரு தாய் தவறுதலாக ‘அவன்’ எனப்படும் உணவைச் சமைக்கவும் சூடுபடுத்தவும் உதவும் உலை அடுப்பில் தனது குழந்தையை உறங்க வைத்தார். அக்குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் நலனுக்கு ஆபத்து விளைவித்ததாக மிசூரி மாநிலத்தின் கான்rஸ் சிட்டி நகரைச் சேர்ந்த மரியா தாமஸ் என்ற மாதின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஒரு குழந்தை மூச்சு விடாமல் இருந்ததாக வெள்ளிக்கிழமையன்று (9 பிப்ரவரி) காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. குழந்தையின் உடலில் சூட்டுக் காயங்கள் இருந்ததாக மரணத்துக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை விவரிக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

குழந்தை சம்பவ இடத்தில் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

தாய் அக்குழந்தையை உறங்க வைக்கும்போது அவர் தவறுதலாக தொட்டிலுக்குப் பதிலாக ‘அவன்’ அடுப்பில் வைத்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பதற்கான விளக்கம் அறிக்கையில் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்