தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதியின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு

1 mins read
e54f857a-bf5c-4053-af97-2ef723df0f55
சீக்கியப் பிரிவினைவாதி திரு இந்தர்ஜீத் சிங் கோசலின் வீட்டுச் சன்னலில் துப்பாக்கித் தோட்டாவால் ஏற்பட்ட துளை குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

ஒட்டாவா: கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதி ஒருவரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய அரசாங்க எதிர்பார்ப்பாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கனடாவும் அமெரிக்காவும் அண்மையில் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் இருக்கும் திரு இந்தர்ஜீத் சிங் கோசலின் வீட்டுச் சன்னலில் துப்பாக்கித் தோட்டாவால் ஏற்பட்ட துளை குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும் அங்கு யாரும் வசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

திரு கோசல், நியூயார்க்கில் வசிக்கும் சீக்கியப் பிரிவினைவாதியான குர்பட்வந்த் சிங் பன்னுனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் திரு பன்னுனைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்