செம்மறியாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்

செம்மறியாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்

1 mins read
42f2d53b-5d5f-4513-965a-36bdc75ccde8
செம்மறியாடுகளின் தோலிலும் குடல்பகுதியிலும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: இணையம்

துபாய்: குவைத்தின் சட்ட அமலாக்க அதிகாரிகள் அண்மையில் நடத்திய சோதனையில் உயிருடன் இருந்த செம்மறியாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரானிலிருந்து டோஹா துறைமுகம் வழியாக வந்த செம்மறியாடுகளில் போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடத்தல் முறைகளில் இது புதுவகையான ஒரு சிக்கலாக எழுந்துள்ளது.

செம்மறியாடுகளை ஏற்றுமதி செய்வதில் சந்தேகப்படும்படி ஏதோ உள்ளது என்ற துப்பு கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வந்தனர்.

டோஹா துறைமுகத்தை அடைந்தபோது, அந்தச் செம்மறியாடுகளுக்கும் சட்டவிரோதக் கும்பலாக இயங்கிய மூன்று ஆசிய நாட்டவருக்கும் தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

செம்மறியாடுகளின் தோலிலும் குடல்பகுதியிலும் கடத்தல்காரர்கள் போதைப்பொருளைத் திறமையாகப் பதுக்கி வைத்திருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் ஐந்து கிலோ ‘கிரிஸ்டல் மெத்’, ஒரு கிலோ ‘ஹஷிஷ்’, 20,000 போதை மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.

குறிப்புச் சொற்கள்