ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த மருத்துவமனை; பலர் காயம்

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த மருத்துவமனை; பலர் காயம்

1 mins read
a97c704b-2fa2-4447-bb0e-48bff377669b
இடிபாடுகளுக்கு அடியில் மூவர் சிக்கித் தவிப்பதாக டொனெட்ஸ்க் மாநில ஆளுநர் வடிம் ஃபிலாஷ்கின் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

கீவ்: உக்ரேனின் டொனெட்ஸ்க் மாநிலத்தை நோக்கி ரஷ்யா பல ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் அதன் காரணமாக மருத்துவமனை ஒன்று சேதமடைந்ததாகவும் அம்மாநில ஆளுநர் வடிம் ஃபிலாஷ்கின் பிப்ரவரி 14ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இதில் பலர் காயமடைந்ததாக அவர் கூறினார்.

இடிபாடுகளுக்கு அடியில் மூவர் சிக்கியிருப்பதாகவும் அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட மருத்துவமனையிலிருந்து 100 நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர்கள் அருகில் உள்ள நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்