கட்டாய ராணுவ சேவையை ஏப்ரலில் அமல்படுத்த மியன்மார் திட்டம்

கட்டாய ராணுவ சேவையை ஏப்ரலில் அமல்படுத்த மியன்மார் திட்டம்

1 mins read
81d90ab9-dc73-41f9-bbab-a7fd4861e761
படம். - தமிழ் முரசு

யங்கூன்: மியன்மாரில் ஆளும் ராணுவ ஆட்சி மன்றத்துக்கு எதிராக கிளர்ச்சி எழுந்துள்ளதால் நாட்டின் இளையர்களை இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டாய தேசிய சேவையில் ஈடுபடுத்த அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையினரையும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தவும் எண்ணம் கொண்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அங்கு குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் அதிக மக்களை ராணுவத்தில் சேர்க்கும் முயற்சி அந்நாட்டில் ராணுவம் கடும் நெருக்கடியில் இருப்பதைக் காட்டுவதாக உள்ளது என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

மியன்மாரில் 18லிருந்து 35 வயது வரையிலான ஆண்களும் 18லிருந்து 27 வயது வரையிலான பெண்களும் ஈராண்டுகள் வரை கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ராணுவ ஆட்சி மன்றம் சட்டம் ஒன்றை சனிக்கிழமை அன்று பிரகடனம் செய்தது. அந்த கட்டாய ராணுவ சேவை இவ்வாண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என்று செவ்வாய்க்கிழமை ராணுவம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்