உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடு ஜெர்மனி

உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடாக இருந்த ஜப்பான் ஓர் இடம் பின்தங்கி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஜெர்மனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சி குறித்து வியாழக்கிழமை அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.

2023ஆம் ஆண்டில் ஜப்பானின் பொருளியல் 1.9 விழுக்காடு கூடியது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதேநேரம் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான யென்னின் மதிப்பும் குறைந்ததால் தான் ஜப்பான் ஓர் இடம் பின்தங்கியதாக பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்றுமதியை அதிகம் சார்ந்த நாடு ஜப்பான். யென்னின் வீழ்ச்சியால் அது தடுமாறியதாக அவர்கள் குறிப்பிட்டனர். 2022, 2023ஆம் ஆண்டுகளில் யென்னின் மதிப்பு வீழ்ச்சி கண்டது.

ஜெர்மனியின் பொருளியலும் ஏற்றுமதியை அதிகம் சார்ந்தது. ர‌ஷ்ய - உக்ரேன் போரால் அதன் ஏற்றுமதி குறைந்துள்ளது. இருப்பினும் யூரோவின் மதிப்பில் அதிகம் மாற்றம் இல்லாததால் ஜெர்மனிக்கு பாதிப்பில்லை.

ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் பிற்பாதியில் அது தொடங்கியதாக கூறப்பட்டது. ஏற்கெனவே அந்நாட்டில் பொருளியல் ரீதியாக பல பிரச்சினைகள் வெடித்துள்ளன. இந்த தகவல் அந்நாட்டு பிரதமர் ரி‌ஷி சுனக்கிற்கு தலைவலியை ஏற்படுத்தலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!