ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் ஈராண்டுகளில் புதிய உச்சம்

சிட்னி: இவ்வாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் ஈராண்டுகால உச்சம் தொட்டது.

ஜனவரியில் அங்கு 500 வேலைகள் மட்டும் உருவாக்கப்பட்டன. வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்கு இந்த எண்ணிக்கை போதாது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவில் இது தெரியவந்தது.

வேலையின்மை விகிதம் 3.9 விழுக்காட்டில் இருந்து 4.1 விழுக்காடாக உயர்ந்தது.

வியாழக்கிழமை காலை 10.55 மணி நிலவரப்படி, ஆஸ்திரேலிய டாலருக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 0.1 விழுக்காடு உயர்ந்தது. ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு 1.1435 என்ற அளவை எட்டியது.

வருடாந்திர வேலை வளர்ச்சி ஜனவரியில் 2.6 விழுக்காடாகக் குறைந்தது. ஓராண்டுக்கு முன்னர் இந்த விகிதம் 3.7 விழுக்காடாக இருந்தது.

இந்நிலையில், தொழிலாளர் சந்தை மேலும் மெதுவடையும் என்று ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. 2025 நடுப்பகுதிக்குள் வேலையின்மை விகிதம் 4.4 விழுக்காடாகும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

அதிகரித்துவரும் தொழிலாளர் சந்தைக்கு ஈடுகொடுக்க ஆஸ்திரேலியப் பொருளியலுக்கு மாதத்துக்கு 32,000க்கும் மேற்பட்ட வேலைகள் தேவை என்று புளூம்பெர்க் எக்கானாமிக்ஸ் பகுப்பாய்வாளர் ஜேம்ஸ் மெகிண்டியர் கணிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!