தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க் ரயில் நிலையம் துப்பாக்கிச்சூடு: 16 வயது சிறுவன் கைது

1 mins read
5590a03d-c855-49ce-8ae4-4b9b2412cfec
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மவுண்ட் ஈடன் அவென்யூ சுரங்க ரயில் நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அண்மையில் நியூயார்க் நகரின் புரோன்ஸ் பகுதியில் உள்ள சுரங்க ரயிலிலும் ரயில் நிலையத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அதில் ஒருவர் மாண்டதுடன் ஐவர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 16 வயது சிறுவன் லேங்கல் ஜோன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தமது அடுக்குமாடி வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றபோது அவரை நியூயார்க் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று நியூயார்க் காவல்துறையின் புலன்விசாரணைப் பிரிவுத் தலைவர் ஜோசஃப் கென்னி தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் மெக்சிகோவைச் சேர்ந்த ஊழியரான 35 வயது திரு ஒபெட் பெல்ட்ரன் சாஞ்சேஸ் மாண்டார்.

காயமடைந்தவர்கள் 14 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ரயிலில் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு மூண்டதை அடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்