கென்சஸ் நகரில் துப்பாக்கிச் சூடு: பதின்மவயதினர் இருவர் கைது

கென்சஸ் நகரில் துப்பாக்கிச் சூடு: பதின்மவயதினர் இருவர் கைது

1 mins read
5fddf6a2-6803-4f46-99ba-6085d43186dd
கன்சாஸ் நகரத்தில் சூப்பர் பவுல் கொண்டாட்டத்தின்போது வாக்குவாதத்தின் விளைவால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; கிட்டத்தட்ட 22 பேர் காயமடைந்தனர். - படம்: நியூயார்க்டைம்ஸ்

கென்சஸ்  நகரம், மிசூரி: கென்சஸ்  நகரத்தில் சூப்பர் பவுல் கொண்டாட்டத்தின்போது வாக்குவாதத்தின் விளைவால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; கிட்டத்தட்ட 22 பேர் காயமடைந்தனர் என்று காவல் தலைவர்  ஸ்டேசி கிரேவ்ஸ் கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்டவர்கள் 8 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். காயமடைந்தவர்களில் பாதி பேர் 16 வயதுக்கு குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது. 

முதலில் மூன்று இளையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்கு இச்சம்பவத்தோடு தொடர்பில்லாததை உறுதி செய்த பின்னர் அவரை விடுவித்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளையர்கள் மீதும்சுமத்தப்பட இருக்கும் குற்றச்சாட்டுகளை நிர்ணயிக்க, இளங்குற்றவாளிகள் நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து செயல்படுவதாக என்று காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்