தோழியைக் கொல்ல சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டு சிறை

தோழியைக் கொல்ல சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டு சிறை

1 mins read
20b893c7-a1fe-41f1-879b-7681651abf4c
ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொல்ல சதி செய்த டெனலி பிரேமருக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: அலாஸ்கா சட்டத் துறை
Google News Preferred Icon

எங்கரேஜ்: ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொல்ல சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிகழ்ந்தது.

தம்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை 23 வயது டெனலி பிரேமர் ஒப்புக்கொண்டார்.

இக்கொலை, ஜூன் 2, 2019ல் தண்டர்பர்ட் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள எக்லுட்னா ஆற்றின் கரையில் நடந்தது. அங்கு, 19 வயதான திருவாட்டி சிந்தியா ஹோஃப்மன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் ஆதாரங்கள் காட்டியுள்ளன.

பிரேமர், நியூ சாலிஸ்பரி, இந்தியானாவைச் சேர்ந்த டேரின் ஷில்மில்லர் என்பவரை சமூக ஊடகத்தின் மூலம் சந்தித்துள்ளார். 

ஆனால், டேரின் ஷில்மில்லர் தனது பெயர் “டைலர்” என்றும் அவர் கென்சசைச் சேர்ந்த கோடீஸ்வரர் என்றும் பிரெஹ்மரை  நம்ப வைத்தார். 

யாரையாவது கொலை செய்து அதைக் காணொளி எடுத்து தமக்கு அனுப்பினால் 9 மில்லியன் டாலர் தருவதாக பிரேமரிடம் அவர் தெரிவித்தார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு ஷில்மில்லர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பிரேமர் இக்குற்றத்தைப் புரிந்தார்.

குறிப்புச் சொற்கள்
சிறைகொலை