ஹாங்காங்கில் பணமோசடி வழக்கில் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது

ஹாங்காங்கில் பணமோசடி வழக்கில் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது

1 mins read
fc039999-36b9-4ca2-b9d7-5a802feed310
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து $28.5 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங் காங்: ஹாங்காங்கில் பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எழுவரை அந்நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 16ஆம் தேதி) கைது செய்தனர். அவர்கள் $2.4 மில்லியன் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றி மோசடி செய்ததாகவும் இதுவே அந்நாட்டில் நடந்த ஆக பெரிய பணமோசடி எனவும் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் பெண்கள், இருவர் ஆண்கள் என்றும் அவர்கள் அனைவரும் 23 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் ஹங்காங் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், எழுவரில் ஒருவர் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது என அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

அவர்கள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் ஹாங்காங் குடியிருப்புவாசிகள் என்பதை மட்டும் அவர்கள் கூறினர்.

அவர்களிடமிருந்து $28.5 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் இணைய மோசடிகள், மின்னணு பொருள்கள் மற்றும் வைரம் உள்ளிட்ட அரிய ரத்தினங்களைச் சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்தல் போன்ற மோசடிகளில் இக்கும்பல் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

விசாரணைத் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், எழுவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்