தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசா இல்லா சேவையை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் தாய்லாந்து

1 mins read
61dbdfa0-7ace-493e-a7c4-38ad977c8c13
இவ்வாண்டு கிட்டத்தட்ட 35 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்க்க தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம், விசா இல்லாத பயண சேவையை மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக அந்நாட்டு பிரதமர் சிரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து அதன் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக அண்மையில் இந்தியா மற்றும் சீன நாட்டு மக்களுக்கு இலவசமாக விசாக்களை வழங்கியது.

சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக விசா வழங்கியது பொருளியலுக்கு நல்ல பங்களித்ததாக திரு தவிசின் கூறினார்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை தாய்லாந்திற்கு 4.39 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் சென்றுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் சீனச் சுற்றுப்பயணிகள்.

இவ்வாண்டு மட்டும் கிட்டத்தட்ட 35 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்க்க தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தாய்லாந்திற்கு 40 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் சென்றனர்.

சுற்றுலாத்துறையை பெருமளவில் நம்பியுள்ள தாய்லாந்து தென் கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடாக விளங்குகிறது.

குறிப்புச் சொற்கள்