மலேசியாவில் கடந்த ஆண்டு காசநோய் பாதிப்பு அதிகரிப்பு

மலேசியாவில் கடந்த ஆண்டு காசநோய் பாதிப்பு அதிகரிப்பு

1 mins read
e32bceb4-aacc-4018-bdb0-176c36f721d7
காசநோயால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணத் தேவையான நடவடிக்கைகளில் மலேசியா தீவிரம் காட்டுவதாக த ஸ்டார் நாளிதழிடம் மலேசிய சுகாதார அமைச்சு கூறியது. - படம்: இணையம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கடந்த ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.47 விழுக்காடு அதிகரித்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது.

கடந்த ஆண்டு மலேசியாவில் 26,781 பேருக்குக் காசநோய் ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டில் 25,391 பேரும் 2021ஆம் ஆண்டில் 21,727 பேரும் அந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

காசநோயால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணத் தேவையான நடவடிக்கைகளில் மலேசியா தீவிரம் காட்டுவதாக த ஸ்டார் நாளிதழிடம் மலேசிய சுகாதார அமைச்சு கூறியது.

மலேசிய சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள உத்திகளின் விளைவாக காசநோயால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

“காசநோய் பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காசநோய் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,” என்று மலேசிய சுகாதார அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்