பைடன்: நவல்னியின் மரணத்துக்கு புட்டினும் அவரது அடியாட்களும்தான் காரணம்

பைடன்: நவல்னியின் மரணத்துக்கு புட்டினும் அவரது அடியாட்களும்தான் காரணம்

1 mins read
53a3dcf2-2eb4-49bd-83ca-7da64d4299bf
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினும் அவரது அடியாட்களும்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார்.

திரு நவல்னி, அதிபர் புட்டினைக் கடுமையாக விமர்சித்தவர்.

சிறையில் அடைக்கப்பட்ட திரு நவல்னி, பிப்ரவரி 16ஆம் தேதியன்று இறந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரு நவல்னி சிறையில் இருந்தபோது மரணத்தின் பிடியில் சிக்கியதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்று அதிபர் பைடன் கூறினார்.

திரு நவல்னிக்கு என்ன நடந்தது என்று துல்லியமாகத் தெரியாவிட்டாலும் அவரது மரணத்துக்கு அதிபர் புட்டினும் அவரின்கீழ் செயல்படுபவர்களும்தான் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் திரு பைடன்.

“ஆனால் ரஷ்ய அதிகாரிகள் வேறு கதை சொல்லப்போகின்றனர். ஆனால் சந்தேகம் வேண்டாம். திரு நவல்னியின் மரணத்துக்கு புட்டினும் அவரது அடியாட்களும்தான் காரணம்,” என்று அதிபர் பைடன் கூறினார்.

புட்டினின் ஆட்சியில் ஊழல், வன்முறை தலைவிரித்து ஆடுவதாகவும் அதை மிகத் துணிச்சலுடன் திரு நவல்னி எதிர்த்தார் என்றும் அதிபர் பைடன் அஞ்சலி செலுத்தினார்.

திரு நவல்னியின் மரணத்தைத் தொடர்ந்து ரஷ்யாவைத் தண்டிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்.

ஆனால் அதுகுறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்