பழங்குடியினரிடையே வன்முறை; 64 பேர் பலி

பழங்குடியினரிடையே வன்முறை; 64 பேர் பலி

படம்: ஏஎஃப்பி

19 Feb 2024 - 11:28 am

1 mins read

போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை பிப்ரவரி 19ஆம் தேதியன்று தெரிவித்தது.

பழங்குடியினருக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 64 பேர் மாண்டுவிட்டதாக பாப்புவா நியூ கினி காவல்துறையின் உதவி ஆணையர் சாம்சன் குவா தெரிவித்தார்.

பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை அவர்களை ஒரு கும்பல் மறைந்திருந்து தாக்கியதாக நம்பப்படுகிறது.

மேலும் பல சடலங்கள் புதர்களுக்குள் மறைவாக இருக்கக்கூடும் என்று நியூ கினி காவல்துறை நம்புகிறது.

இத்தாக்குதல் சம்பவம் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து 600 கிலோமீட்டர் தூரத்தில், வடமேற்குப் பகுதியில் உள்ள வபாக் நகருக்கு அருகில் நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்