$480 மில்லியன் அபராதம் கட்டுவதில் சிரமம்; காலணிகளை விற்கும் டிரம்ப்

$480 மில்லியன் அபராதம் கட்டுவதில் சிரமம்; காலணிகளை விற்கும் டிரம்ப்

1 mins read
534f200c-0cdc-40ce-8e74-6467b475e97a
ஃபிலடெல்பியாவில் நடந்த காலணி மாநாட்டில் அவருடைய பெயரில் தயாரிக்கப்படும் காலணிகளை விளம்பரப்படுத்த டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார்.  - படம்: ஏஎஃப்பி 

ஃபிலடெல்ஃபியா: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்குப் பிப்ரவரி 15ஆம் தேதியன்று நியூயார்க் சிவில் மோசடி வழக்கில் சுமார் 355 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் அவர் ஃபிலடெல்பியாவில் நடந்த காலணி மாநாட்டில் டிரம்ப்பின் பெயரில் தயாரிக்கப்படும் காலணிகளை விளம்பரப்படுத்த கலந்துகொண்டார். 

அவை,  வெறும் 400 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக விற்பனை செய்யப்பட்டன.

மிச்சிகனில் திட்டமிடப்பட்ட பேரணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் அந்தக் காலணி மாநாட்டில் கலந்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

நீதிமன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனைகளையும் நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள தமக்கு இருக்கும் புகழைச் சாதகமாகப் பயன்படுத்தி இம்முயற்சியை டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.  

குறிப்புச் சொற்கள்